திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ- குருவட்ட அளவிலான கால் பந்து போட்டிகள் 21,22,23.08.2024 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் இரண்டாம நாள் 22.08.2024 அன்று 17 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு அன்னை வேளாங்கண்ணி ெட்ரிக் மேல் நிலைப்பள்ளி சார்பாக நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் 15 மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றனர். இந்த போட்டியை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு. Rev. Fr. எட்வர்ட் ராஜ் மற்றும் முதல்வர் திரு.B. பால்ராஜ் அவர்கள் போட்டியை தொடங்கி வைத்தனர். அவர்கள் இருவரையும் கௌரிக்கும் விதமாக எமது கல்லூரியின் முதல்வர் திரு சுப்பையா அவர்கள் மற்றும் உடற்கல்வி பேராசிரியர் திரு உதயகுமார் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.