போட்டிகள் நமது வத்தலகுண்டு கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டிகள் நடைபெற்றது. விழாவினை கல்லூரியின் தாளாளர் ஹாஜி ஐ. பஜத்துல் ரகுமான் மற்றும் கல்லூரியின் பொருளாளர் ஹாஜி. ப.மும்தாஜ் பேகம் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சமத்துவ பொங்கல் விழாவிற்கான சிறப்புரையை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு முனியாண்டி வழங்கினார்.வத்தலகுண்டு, நிலக்கோட்டை, மற்றும் ஆத்தூர் தாலுகா ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.. திரு சுந்தரமாகலிங்கம், மத்திய இளையோர் நலன் விளையாட்டுத் துறை இயக்குனர் (ஓய்வு), திரு V.C கண்ணன், பள்ளப்பட்டி பால்பண்ணை உரிமையாளர் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர். மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டிகளை திண்டுக்கல் மாவட்ட அமைச்சூர் கபாடி கழக கௌரவ தலைவர் மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திரு சவடமுத்து அவர்கள் துவங்கி வைத்தார். மேலும் இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்த சிறப்பு விருந்தினர் அனைவரும் கல்லூரியின் தாளாளர் பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கினார். இப்போட்டியில் 20க்கு மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர். அதில் ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதல் இடத்தை பெற்று பரிசு தொகையினையும், கோப்பையும் தட்டி சென்றனர். இரண்டாவதாக கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி பிடித்து பரிசு தொகையினையும், கோப்பையும் வென்றனர். மூன்றாம் இடத்தை வத்தலகுண்டு CSI மேல்நிலைப் பள்ளி அணி பிடித்து பரிசு தொகையினையும், கோப்பையும் வென்றனர். நான்காம் இடத்தை நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி பிடித்து பரிசு தொகையினை பெற்று கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து அணி வீரர்களும் பங்கேற்ப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கல்லூரி தாளாளர் ஹாஜி ஐ. பஜத்துல்














