விழிப்புணர்வு கருத்தரங்கு

January 30, 2024

வத்தலகுண்டு கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 30.01.2024 அன்று DEEPAM (Dynamic Education and Empowerment Promoting Agency for Marginalized ) லியோனார்டு மருத்துவமனை வத்தலகுண்டு சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் எமது கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் மற்றும் 70 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கிற்கு வந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையை வழங்கினார் எமது கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் திரு செந்தில்குமார் அவர்கள். மேலும் லியோனார்டு மருத்துவமனையில் இருந்து வந்த சிறப்பு விருந்தினர் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றி மாணவ மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார் . கருத்தரங்கின் இறுதியில் வணிகவியல் துறை பேராசிரியர் திரு சேதுமுனி அவர்கள் நன்றி கூறினார்.

குடியரசு தின விழா கொண்டாட்டம்14 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி