குடியரசு தின விழா கொண்டாட்டம்

January 26, 2024

வத்தலகுண்டு கே. பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26.01.2024 அன்று 75 வது குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்லூரியின் தாளாளர், கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையை  கணிதவியல் துறை தலைவர் திரு செந்தில்குமார் அவர்கள் கூறினார். அதன் பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் ஹாஜி ஐ.பஜத்துல் ரகுமான் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . பின்பு கொடி பாடல் பாடப்பட்டது. குடியரசு தின விழாவை பற்றி கல்லூரியின் முதல்வர் திரு சுப்பையா அவர்கள் பேசினார். நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ் துறை தலைவர் திருமதி சௌந்தர்யா அவர்கள் நன்றி கூறினார்.நாட்டுப்பெண் இசைக்க நிகழ்ச்சி நிறைவடைந்தது.

தேசிய வாக்காளர் தினம்விழிப்புணர்வு கருத்தரங்கு