22-12-2024 நமது கல்லூரியின் மாணவ-மாணவிகள் நேர்-உயர் மையத்தில் வெற்றி!

22-12-2024 நமது கல்லூரியின் மாணவ-மாணவிகள் நேர்-உயர் மையத்தில் வெற்றி!

22-12-2024 நமது கல்லூரியின் மாணவ-மாணவிகள் நேர்-உயர் மையத்தில் வெற்றி!

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகள் 22.12.2024 மவுண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேருயுவ கேந்த்ராவால் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கயிறு இழுக்கும் போட்டியில் எமது கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் கோகில வாணி, அன்னபூரணி, தாரண்யா , ரூபினி, பிரதீபா, யோகஸ்ரீ, சுசித்ராலீனா மேரி ஆகியோர் கலந்துகொண்டு முதலிடமும் பெற்றனர்.மேலும் மாணவிகளுக்கு நடத்தப் பட்ட ஓட்டப்பந்தயத்தில் எமது கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் கோகிலவாணி என்ற மாணவி மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். மேலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் முதலாம் ஆண்டு பயிலும் முகமது அனஸ் என்ற மாணவன் முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூடினார். போட்டியில் வெற்றி பெற்ற எமது கல்லூரியின் மாணவச் செல்வங்களுக்கும், ஊக்குவித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகம், முதல்வர், துணைமுதல்வர், ஆசிரியபெருமக்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.