கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் GST Filing மதிப்புக்கூட்டப்பட்ட கல்வி துவக்கவிழா

August 18, 2026

கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் எதிர்கால நலன்
மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், வணிகவியல் மற்றும் வணிக
நிர்வாகவியல் துறை மாணவர்களுக்காக “GST Filing” எனும் மதிப்புக்கூட்டப்பட்ட
கல்வி (Value Added Course) வழங்கும் திட்டத்தின் விழிப்புணர்வு மற்றும்
துவக்கவிழா 10.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறைத்தலைவர் திரு. கார்த்திக் அவர்கள்
வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் திரு. சுப்பையா அவர்கள் தலைமை
உரையாற்றி, இன்றைய போட்டி நிறைந்த வேலைவாய்ப்பு சூழலில் மாணவர்கள் திறன்
சார்ந்த கல்வியுடன் தொழில்முறை சான்றிதழ் படிப்புகளையும் கற்றுக்கொள்வதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.

கலை கல்விக்குழுமத்தின் தலைவர் திரு. மணிகண்டன் அவர்கள், GST Filing தொடர்பான
அறிவு வணிகம், கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு துறைகளில் மாணவர்களுக்கு சிறந்த
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதையும், தொழில்முறை வளர்ச்சிக்கு இப்பயிற்சி
பெரிதும் உதவும் என்பதையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, கலை கல்விக்குழுமத்தின் இயக்குனர் திரு. மீனாட்சி சுந்தரம்
அவர்கள், GST Filing மதிப்புக்கூட்டப்பட்ட கல்வியின் பாடத்திட்டம், பயிற்சி
முறை, நடைமுறை கற்றல், சான்றிதழ் வழங்கும் முறை மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த
அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் திருமதி. வித்யா அவர்கள் மதிப்புக்கூட்டப்பட்ட
கல்வியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவர்கள்
இத்தகைய திறன் மேம்பாட்டு பயிற்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி தங்களின் தொழில்
வாய்ப்புகளை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். கணிணி
துறைத்தலைவர் திரு.செந்தில்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் துறைத்தலைவர்கள்
சிறப்பாக மேற்கொண்டனர். நிகழ்ச்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று,
திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியின் முக்கியத்துவத்தை
எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாக நிறைவுற்றது.

Leave a reply
கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “GST Filing” மதிப்புக்கூட்டப்பட்ட கல்வி துவக்கவிழா

Leave Your Reply

Your email address will not be published. Required fields are marked *