09-01-2025 – 20-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்ற மாணவர்களுக்குள் நடத்திய ‘மாபெரும் கபாட்டி’ போட்டியில் மட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி தங்கம்!

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 09.01.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கு இடையிலானா மாபெரும் கபாடிப் போட்டி நடைபெற்றது. போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இந்திய ஆடவர் அணி முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் உயர்திரு.பாஸ்கரன் அவர்கள், உயர்திரு.கணேசன்துணை தலமையாசிரியர் பெருமாள்பட்டி கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்திரு.ஆண்டிச்சாமி தலைமை ஆசிரியர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி சேவுகம்பட்டி கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் ஆமெச்சூர் கபாடி கிளப் கௌரவ தலைவர் உயர்திரு.சவடமுத்து வந்திருந்து விழாவினை சிறப்பித்தார். மேலும் எமது கல்லூரியின் தாளாளர், முதல்வர், துணை முதல்வர், நிர்வாக அதிகாரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் தாளாளர் ஹாஜி.பஜதுல் ரகுமான் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.அந்த கபாடி போட்டியில் மட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தை பிடித்து பரிசு தொகையையும், கோப்பையும் வென்றது. பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் இடத்தை பிடித்து ரொக்க தொகையும், கோப்பையும் வென்றது. தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தை பிடித்து ரொக்க தொகையையும், கோப்பையும் வென்றது . வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு தொகை, கோப்பை, மற்றும் சான்றிதழை வழங்கினார். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசாக கேடயம்