பள்ளி மாணவிகளுக்கிடையிலான உ-குருவட்ட தடகள போட்டிகள்

October 18, 2024

நமது வத்தலகுண்டு கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ-குருவட்ட தடகள போட்டிகள் 27,28,29.08.2024 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது..இதில் இரண்டாம் நாள்(28.08.2024) மாணவிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி நடைபெற்றது. அதில் 400 க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.. விழாவின் துவக்கமாக அனைவரையும் வரவேற்றனர். பின்பு தேசிய கொடியை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு எட்வர்ட்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஒலிம்பிக் கொடியை எமது கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹாஜி. I. பஜத்துல் ரகுமான் அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு அன்னை வேளாங்கண்ணி பள்ளியின் கொடியை எமது கல்லூரியின் முதல்வர் திரு சுப்பையா அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு
உ- குருவட்ட கொடியை அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திரு பால்ராஜ் அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பின்பு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இந்த அணி வகுப்பில் எமது கல்லூரியின் தாளாளர்,முதல்வர், துணை முதல்வர், நிர்வாக அதிகாரி முன்னிலை வகித்தனர். மேலும் ஒலிம்பிக் தீபச் சுடரை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஏற்றி வைத்தார்..மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கான 600M,800M, DISCUS, SHOT PUT, LONG JUMP, TRIPLE JUMP ஆகிய போட்டிகள் நடை பெற்றது… வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்க பட்டது..

கே.பி.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திண்டுக்கல் கல்வி மாவட்டம் உ-குருவட்ட தடகள போட்டிகள்திண்டுக்கல் மாவட்ட தடகள வெற்றியாளர்கள் கௌரவிப்பு