தமிழகத்தில் முதல்முறையாக கல்லூரியில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அதில் வத்தலகுண்டு கே.பி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பட்டிவீரன்பட்டி தலைமை காவல் அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்கள் நியமிக்கப்பட்டார். போலீஸ் அக்கா தொடக்க விழா 15.11.2024 அன்று எமது கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் எமது கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் திரு செந்தில் குமார் அவர்கள் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து போலீஸ் அக்கா திருமதி மஞ்சுளா அவர்கள் எமது கல்லூரியில் மாணவிகளிடம் ஒரு சிறிய கலந்துரையாடல் நடத்தினார். இந்த விழாவில் எமது கல்லூரியின் முதல்வர் திரு சுப்பையா மற்றும் துணை முதல்வர் திருமதி வித்யா அவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக நன்றியுரை எனது கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் செல்வி முத்துச்செல்வி அவர்கள் கூறினார்.